UPDATED : ஆக 13, 2026 06:01 PM
ADDED : ஆக 13, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
தேனி:அல்லிநகரத்தில் உள்ள வட்டார வள மையத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
6 பள்ளிகளை சேர்ந்த 119 மாணவர்கள் குழு நடனம், நாடகம், இசைக்கருவி இசைத்தல், ரங்கோலி, பானை ஓவியம், நாட்டுப்புற நடனம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
