/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலைக் கல்லுாரிகளுக்கு இடையே கலை விழா
/
கலைக் கல்லுாரிகளுக்கு இடையே கலை விழா
ADDED : மார் 15, 2024 06:33 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு இடையேயான கலை விழா நடந்தது.
கல்லுாரி குழுமத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்றார். குழு நடனம், பாட்டுப்போட்டி, ஊமை நாடகம், தொழில் திறன் வினாடி - வினா, கழிவிலிருந்து கலைப் பொருட்கள் செய்தல், புகைப்படம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 27 கல்லுாரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சுஜாதா மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேரி மாதா கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு, மதுரை கல்லுாரி மாணவர்கள் 2ம் பரிசு பெற்றனர். ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் வேல்ராஜன், கம்ப்யூட்டர் பயன்பாடு துறை தலைவர் உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

