/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
ADDED : ஆக 10, 2025 03:01 AM
உத்தமபாளையம்: அரசு பள்ளிகளில் பணியாற்றும் 49 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கல்வியை வழங்க சிறப்பு பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி,பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள நடுநிலை , உயர்நிலை மற்றும் - மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 49 பேர்களுக்கு இரண்டு கட்டங்களாக உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக துணை முதல்வர் கீதாராணி தலைமையிலான விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர்.

