/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை உதவி இயக்குனர் ஆபீஸ் சின்னமனுாருக்கு மாற்றம்
/
கால்நடை உதவி இயக்குனர் ஆபீஸ் சின்னமனுாருக்கு மாற்றம்
கால்நடை உதவி இயக்குனர் ஆபீஸ் சின்னமனுாருக்கு மாற்றம்
கால்நடை உதவி இயக்குனர் ஆபீஸ் சின்னமனுாருக்கு மாற்றம்
ADDED : மார் 01, 2024 12:24 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகம் சின்னமனூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
உத்தமபாளையம் தாலுகா தலைநகராக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், ஆர்.டி.ஓ., ஆபீஸ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், உயிர் உரங்கள் உற்பத்தி மையம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, வேளாண், தோட்டக்கலைத் துறை, மின்வாரியம், வேளாண் பொறியியல் துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள், கிளை சிறைச்சாலை, கிளை கரூவூலம் என அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் செயல்பட்டு வந்த கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் நேற்று முன்தினம் சின்னமனூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில்,
உத்தமபாளையத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
சின்னமனூரில் கால்நடை மருந்தக வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
வாடகையை தவிர்க்க, சின்னமனூரில் உள்ள புதிய கட்டடத்திற்கு நேற்று முதல் இடமாற்றம் செய்துள்ளோம் என்றனர்.

