UPDATED : நவ 14, 2026 08:11 PM
ADDED : நவ 14, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை ஆதி வீராச்சாமி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் 27.
தனியார் பஸ் கண்டக்டர். இவர் தனது நண்பர் குணா என்பவருடன் மேதகார படித்துறை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த லிங்கேஷ்வரன், இவரது நண்பர் பெரியபாண்டி இருவரும் வாசுதேவனிடம் எங்க ஏரியாவுக்கு நீங்கள் எப்படி வரலாம் என கூறி தாக்கினர். இதில் வாசுதேவன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் அறுந்து கீழே விழுந்தது. அதனை லிங்கேஷ்வரன், பெரியபாண்டி எடுத்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
