/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் உண்டியலில் திருட்டு முயற்சி
/
கோயில் உண்டியலில் திருட்டு முயற்சி
ADDED : அக் 09, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பொருளாளராக இருப்பவர் முருகன் 50. இவர் நேற்று முன்தினம் கோயில் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலையில் வந்து பார்த்த போது கோயில் முன்பாக வைத்து இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
பணம் இல்லாததால் உண்டியலை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
முருகன் புகாரில் போடி டவுன் போலீசார் உண்டியலை உடைத்த நபர்களை தேடி வருகின்றனர்.