ADDED : டிச 30, 2024 01:04 AM

கூடலுார்: தேக்கடி நீர்வளத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
கேரளா இடுக்கி மாவட்டம் குமுளி தேக்கடியைச் சேர்ந்தவர் விஷ்ணு. சொந்தமாக லோடு ஆட்டோ வைத்திருந்தார். இரவில் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்வளத்துறை அலுவலகம் அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்துவது வழக்கம். நேற்று அதிகாலை ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தீயை அணைக்க முற்பட்டபோது முழுவதும் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் முன் பகுதியில் பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. குமுளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதற்கு அருகில் தமிழக நீர்வளத்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மாயமானது குறிப்பிடத்தக்கது.

