ADDED : நவ 19, 2024 06:14 AM
தேனி: தேனி மாவட்டத்தில் கோவிந்தநகரம் கம்மதர்மா ஆரம்பப்பள்ளி, குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குச்சனுார் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிகள் 2024-2025ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.
சென்னை சாந்தோமில் நடந்த விழாவில் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன் அரசுப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பள்ளி வளாகத்துாய்மை, மாணவர்களின் வருகை பதிவு, வகுப்புகளில் மாணவர்கள் கற்றல் உள்ளிட்டவை பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்
விருது பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.