ADDED : ஜன 31, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்; கம்பத்தில் டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நகரில் பல இடங்களில் டூவீலர்கள் மற்றும் கார்கள், லாரிகளை நிறுத்தி டிரைவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லைகள் ஒட்டப்பட்டது. பைபாஸ் சந்திப்பு, மெயின் ரோடு, காந்தி சிலை சமீபம் என பல இடங்களில் சாலை விதிகள் பற்றிய விளக்க குறிப்புகள் வழங்கப்பட்டன.
பைபாஸ் ரோட்டில் வேகமாக செல்லும் கார்களை நிறுத்தி மெதுவாக செல்லவும், சீட் பெல்ட் அணிந்து செல்லவும், டூவீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவும் வலியுறத்தினர்.
சாலை விதிகளை பின்பற்றி எப்படி சாலைகளில் கடக்க வேண்டும் போன்ற விளக்கங்களை பாதசாரிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.

