/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 31, 2025 07:18 AM

சின்னமனுார் நகராட்சி சுற்றுப்புறச் சூழல் பாதிப்பில் இருந்து மீள, நகரில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரங்களை நடவு செய்ய வேண்டும். அப்போது தான் சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும்.
சேகரமாகும் கழிவுநீரையும் சுத்திகரித்து வேளாண் சாகுபடிக்கு பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகரமாகும் ஒட்டுமொத்த கழிவு நீர் சின்ன வாய்க்கால் வழியாக உடைய குளம், செங்குளத்தில் கலந்து மாசு படுத்தி வருகிறது.
நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகரின் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆங்காங்கே உடைப்புகள், அடைப்புகள் ஏற்பட்டு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் நகரில் தினமும் சேகரமாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீர் சின்ன வாய்க்காலில் கலந்து வருகிறது.
நகரில் சேகரமாகும் சாக்கடை நீர், செப்டிக்டேங்க் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், உடைந்த பாட்டில்கள் என அனைத்தும் சின்ன வாய்க்கால் வழியாக உடைய குளத்தில் சங்கமமாகின்றன. பாசனத்திற்கு என, வரும் ஆற்று நீரும், சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகள் ஒன்று சேர்ந்து, கண்மாய் நீரை கருப்பு கலராக மாற்றி வருகிறது.
வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு தோல் நோய்கள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுப்புறச்சூழல் கடுமையாக மாசு பட்டு வருகிறது. ஒரு சில தன்னார்வ அமைப்புக்கள், பள்ளி மாணவர்கள் மரங்கன்றுகள் நட்டு, வளர்க்க துவங்கி உள்ளனர்.
மக்கள் இயக்கம்
சிவ செல்லப்பா, இணை இயக்குனர், வேளாண் துறை (ஓய்வு) : சின்னமனுார் நகர், நான்கு திசைகளிலும் ஆயிரக்கணக்கான மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு உள்ளோம். சின்னமனுார் பெரிய ஊராகும்.
புதிதாக ஒரு அமைப்பை துவங்க இளைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். எங்கள் இயக்கம் சார்பில் மரம் நடுவது மட்டும் இன்றி, பிளாஸ்டிக் ஒழிப்பில் கவனம் செலுத்த உள்ளோம்.
குறுங்காடுகளை அரசு மருத்துவமனை, நகராட்சி சந்தை வளாகம் போன்றவற்றில் உருவாக்க ஆலோசித்து வருகிறோம். நகராட்சியில் அனுமதி கேட்க உள்ளோம். உடைய குளத்தை தூர் வார வேண்டும். குளத்தில் தேங்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இப்பணியில் பல தன்னார்வலர் அமைப்புக்கள், பொது மக்கள் பங்கேற்கும் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளோம். சின்னமனுாரில் கிடைக்கும் இடங்களில் மரங்கன்றுகளை வளர்க்க முடிவு செய்துள்ளோம். வீடுதோறும் மூலிகை செடிகள், மாடித் தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்., என்றார்.
குறுங்காடு அமைக்க ஏற்பாடு
பெருமாள், மாவட்டத் தலைவர், ஐயப்பா சேவா சங்கம், சின்னமனுார் : சின்னமனுாரில் குறுங்காடு ஒன்றை அமைக்க வேண்டும். ரோட்டரி கிளப், வனத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் மரங்கன்றுகளை வளர்த்துள்ளனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து வீடுகளில் மூலிகை தோட்டம் ஏற்படுத்த உள்ளோம்.
காடுகளை அதிகரிக்க வேண்டும். காடுகள் குறுகியதால் வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதை தவிர்க்க வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்திட வேண்டும். பசுமையான சின்னமனுரை உருவாக்க பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் வகுப்புக்கள் தினமும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகருக்குள் இடம் இல்லாவிட்டாலும், நகரை சுற்றி கண்மாய் கரைகள், மேகமலை ரோடு, முத்துலாபுரம் ரோடு , சீலையம்பட்டி ரோடுகளில் மரங்களை வளர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம்.