ADDED : அக் 20, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச்செயலாளர்கள் மகேஸ்வரன், நவீன்ராம் முன்னிலை வகித்தனர்.
பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சணை தடுப்பு சட்டம், பெண்கள், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு, குடும்ப வன்முறை தண்டனை சட்டங்கள் பற்றி மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய போக்சோ குழு வழக்கறிஞர் சசிகலா பேசினார்.
தேனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் தீபா, மாவட்ட பாலின நிபுணர் வெற்றிவேல் பேசினர்.