ADDED : ஜூலை 19, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியின் உள்புகார் குழு பெண்கள் அதிகாரமளிக்கும் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி டி.எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் போக்சோ சட்டம், இணையவழியில் பெண்களை ஏமாற்றப்படும் விதம் பற்றி விளக்கப்பட்டது. கல்லுாரி பெண்கள் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா நன்றி கூறினார். கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

