/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னோடி விவசாயிகள் மூலம் 'அட்மா' திட்ட விழிப்புணர்வு
/
முன்னோடி விவசாயிகள் மூலம் 'அட்மா' திட்ட விழிப்புணர்வு
முன்னோடி விவசாயிகள் மூலம் 'அட்மா' திட்ட விழிப்புணர்வு
முன்னோடி விவசாயிகள் மூலம் 'அட்மா' திட்ட விழிப்புணர்வு
ADDED : செப் 18, 2025 05:45 AM
தேனி : வேளாண் திட்டங்களை முன்னோடி விவசாயி கள் மூலம் மற்ற விவசாயிகளுக்கு கொண்டு செல்ல வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வேளாண்துறை சார்பில் 'அட்மா' திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா, தொழில்நுட்ப பயிற்சிகள், உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயனாளிகளை தேர்வு செய்யவும் வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக வட்டாரத்திற்கு 3 முன்னோடி விவசாயிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தேனி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது.
வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தலைமை வகித்தார். துணை இயக்குநர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளர்ச்சித்துறையினரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அட்மா திட்டத்தில் அத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் முன்னோடி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.