/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் முருகன் கோயிலில் பாலாபிஷேகம் பாதாள செம்பு முருகன் கோயில் ஆதினம் பங்கேற்பு

ADDED : பிப் 13, 2024 05:09 AM

சின்னமனூர் : சின்னமனூர் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை பாலாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பத்தர்கள் பங்கேற்றனர். பாதாள செம்பு முருகன் கோயில் ஆதினம் பங்கேற்று ஆசி வழங்கினார்.
சின்னமனூர் - உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் பிரிவில் உள்ள முருகன் கோயிலில் பாலாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குட ஊர்வலம் நடத்தினர்.
முன்னதாக பாதாள செம்பு முருகன் கோயில் ஆதினம் இரட்டை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். ஊர் பொதுமக்கள் சார்பில் ஏலக்காய் மாலை அணிவித்தனர்.
ஆதினம் சாரட் வண்டி ஊர்வலத்தின் முன்பு கலை நிகழ்ச்சிகள்,வாண வேடிக்கைகள் நடந்தது. ஊர்வலம் கோயிலுக்கு வந்தடைந்தது.
பால்குடங்களில் கொண்டு வரப்பட்ட 500 லிட்டர் பாலில் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் பக்தர்களுக்கு ஆதினம் ஆசி வழங்கினார்.
ஆதினம் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்களுக்கு வேட்டி, சேலை, பெட்சீட் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆதினத்துடன் நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு, பஞ்சாப் குமரன், வாழைக்காய் ஏற்றுமதியாளர் ஏ.பி. கருப்பையா, குப்பமுத்து சந்தானம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சமய குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.