/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிழற்கூரையை ஆக்கிரமிக்கும் பேனர்கள் அல்லிநகரம் பொதுமக்கள் சிரமம்
/
நிழற்கூரையை ஆக்கிரமிக்கும் பேனர்கள் அல்லிநகரம் பொதுமக்கள் சிரமம்
நிழற்கூரையை ஆக்கிரமிக்கும் பேனர்கள் அல்லிநகரம் பொதுமக்கள் சிரமம்
நிழற்கூரையை ஆக்கிரமிக்கும் பேனர்கள் அல்லிநகரம் பொதுமக்கள் சிரமம்
ADDED : ஜூன் 20, 2025 03:47 AM

தேனி: அல்லிநகரம் பஸ் நிறுத்த நிழற்கூரை நுழைவு வாயிலை மறைத்து கட்சியினர் பேனர்களை கட்டுவதால் பயணிகள் வெயில், மழை காலங்களில் ரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
தேனி -பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூரை உள்ளது. இது பயணிகளுக்கு மிக பயனுள்ள வகையில் இருந்தது. இதன் நுழைவு வாயிலை மறைத்து அரசியல் கட்சியினர் அடிக்கடி பிளக்ஸ் பேனர்களை கட்டுகின்றனர். முதியோர் மாற்றுத்திறனாளிகள் நிழல்கூரைக்குசெல்ல முடியாமல் மெயின் ரோட்டில் வெயில், மழையில் நின்று சிரமம் அடைகின்றனர்.
பேனர்களை அகற்ற வேண்டிய அல்லிநகரம் போலீசார், நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இடையூறாக பேனர் கட்டுவதை தடுக்கவும், மீறி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.