/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: ஊர்க்காவல் படையினருக்கு எஸ்.பி., அறிவுரை

ADDED : மார் 01, 2024 12:20 AM

தேனி : போலீசாரின் பணியோடு ஊர்க்காவல் படையினர் இணைந்து பொது மக்களிடம் கனிவாகவும், மரியாதையாகவும் பேசி, அவரது குறைகளை கேட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்' என நேற்று பயிற்சி முடிந்து புதிதாக பணி ஏற்ற ஊர்க்காவல் படையினருக்கு தேனி எஸ்.பி., சிவபிரசாத் அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் சரக ஊர்க்காவல் படை சார்பில், தேனி மாவட்டத்திற்கான ஊர்க்காவல் படை வீரர்கள் புதிதாக 61 தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2023 டிச., 14 முதல் பயிற்சி வழங்கப்பட்டது. 45 நாட்கள் பயிற்சி முடித்த 56 ஆண்கள், 7 பெண்கள் உட்பட 63 ஊர்க்காவலர் படை பிரிவினர் நேற்று தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த பணி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். விழாவிற்கு எஸ்.பி., தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.,கள் விவேகானந்தன், சுகுமார், திண்டுக்கல் சரக ஊர்க்காவல்படை உதவி தளபதி அஜ்ய்கார்த்திக்ராஜா, வட்டார தளபதி செந்தில்குமார், கோட்ட தளபதி முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பணியின் போது உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் நாகேந்திரனின் மனைவி தேவகனிக்கு ரூ.15 ஆயிரம், பணியின் போது காயமடைந்த வீரர் ரீகனுக்கு ரூ.10 ஆயிரம் காசோலைகளை, ஊர்க்காவல் படை சேமநல நிதியின் மூலம், எஸ்.பி., வழங்கினார். ஏற்பாடுகளை ஊர்க்காவல் படை அலுவலக எஸ்.ஐ., கனகசபை, எழுத்தர் பிரகாரன் செய்திருந்தனர்.