ADDED : டிச 13, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ் மன்றம் சார்பில், பாரதியாரின் பிறந்தநாள் விழா நடந்தது. ஓவியம், பேச்சுப் போட்டி, கலந்துரையாடல் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஓவியப் போட்டியில் ஜோதி கவுசல்யா முதல் பரிசும், கிதியோன் 2ம் பரிசும் பெற்றனர். கலந்துரையாடல் போட்டியில் ராஜலட்சுமி முதல் பரிசும், ஜீவன்யா 2ம் பரிசும் பெற்றனர். பேச்சுப் போட்டியில் மணிமேகலை முதல் பரிசும், பாலகணபதி 2ம் பரிசும் பெற்றனர். முதல்வர் வெற்றிவேல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

