/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் வழிப்பாதைகளை பிரிக்கும் பணியில் மெத்தனம்: மத்திய அரசின் ரூ.50 கோடி பணியில் விறுவிறுப்பு இல்லை
/
மின் வழிப்பாதைகளை பிரிக்கும் பணியில் மெத்தனம்: மத்திய அரசின் ரூ.50 கோடி பணியில் விறுவிறுப்பு இல்லை
மின் வழிப்பாதைகளை பிரிக்கும் பணியில் மெத்தனம்: மத்திய அரசின் ரூ.50 கோடி பணியில் விறுவிறுப்பு இல்லை
மின் வழிப்பாதைகளை பிரிக்கும் பணியில் மெத்தனம்: மத்திய அரசின் ரூ.50 கோடி பணியில் விறுவிறுப்பு இல்லை
UPDATED : டிச 13, 2025 08:11 AM
ADDED : டிச 13, 2025 05:40 AM

கிராமங்களில் வேளாண் மின் இணைப்பும், குடியிருப்புகளுக்கான மின் இணைப்புகளும் ஒரே டிரான்ஸ்பார்மர் மூலம் வழங்கப்படுகிறது. வேளாண் இணைப்புகளுக்கு தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின் வினியோகம் இருக்கும். குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் மின் சப்ளை இருக்க வேண்டும். ஒரே டிரான்ஸ்பார்மரில் வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்தும் போது, குடியிருப்புகளின் மின் வினியோகம் நிறுத்த வேண்டி உள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ் (Revamped Service Sector Scheme) என்ற திட்டத்தை அறிவித்தது. இது 2021 முதல் 2026 வரை 5 ஆண்டுகளுக்கான திட்டமாகும். மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி இந்த திட்டத்திற்கென மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
கிராமங்களில் டிரான்ஸ்பார்மர்களில் உள்ள வேளாண், குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து மின் வினியோகம் செய்ய உதவும் இந்த திட்டப் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளாமல் இருந்தது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் துவங்க ஆயத்தமான போது, தேர்தல் தேதி அறிவிப்பால் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின் ஒரு சில இடங்களில் துவங்கியும், பல இடங்களில் துவங்காமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
23பீடர்களில் புனரமைப்பு பணி இது பற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனி மின் வழிப்பாதை இருக்கும். ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் 3 முதல் 5 பீடர்கள் வரை இருக்கும். மாவட்டத்தில் உள்ள 78 பீடர்களில், முதற்கட்டமாக 23 பீடர்களை ரூ.50 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. வேளாண், குடியிருப்பு என மின் வழிப்பாதை தனித்தனியாக பிரிக்கப்படும்.
இதன் மூலம் குடியிருப்புகளுக்கு தடையின்றி சப்ளை கிடைக்கும். பல்வேறு காரணங்களால் பணிகளை துவக்குவதில் பிரச்னை இருந்தது. தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது, என்கின்றனர்.
கம்பம் துணை மின் நிலையம் இத்திட்டத்தில் சேர்க்கவில்லை. உத்தமபாளையத்தில் அம்பாசமுத்திரம், மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் அம்மாபட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் சீலையம்பட்டி உள்ளிட்ட பல மின் வழிப்பாதைகள் பிரிக்கப்பட உள்ளது.
விரைந்து முடிக்க வலியுறுத்தல் 2021ல் துவங்கிய இந்த திட்டம் 2026க்குள் முடிக்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டது.
ஆனால் 2026ல்தான் துவங்க உள்ளது. மாவட்டத்தில் இத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி ஆர்.டி.எஸ்.எஸ். திட்டத்தை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.

