ADDED : ஜன 14, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் தேனியில் பாரதியார் விழா நடந்தது. விழாவிற்கு அமைப்பு தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முத்து விஜயன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஈஸ்வர்தாஸ், பொன்கணேஷ், இணைச்செயலாளர் நீலபாண்டியன் பேசினர். கவிஞர் மீரான் தலைமியில் 24 வரி கவியரங்கம் நடந்தது. பாரதியார் பற்றி பேசினர். தொடர்ந்து கருத்தரங்கம், பரிசளிப்பு விழா நடந்தது. அமைப்பு சார்பில்
ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் ராம் நன்றி கூறினார்.

