ADDED : மார் 16, 2025 06:57 AM
போடி; போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் தாவரவியல் துறை, மாநில அறிவியல் தொழில் நுட்ப மன்றம் சார்பில் உயிர் தகவலியல் துறை பயன் பாடுகள் குறித்து தேசிய பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ராமநாதன், கல்லூரி முதல்வர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் கோபி வரவேற்றார். ஏலக்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர் பாதுகாப்புத் துறையின் தலைவர் தனபால் மசாலா பயிர்களில் உயிர் தகவலியல் பயன் பாடுகள் குறித்தும், பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் பாஸந்த் திவாரி உயிர் தகவலியல் குறித்தும், மதுரை விவேகானந்தா கல்லூரி முன்னாள் இணை போராசிரியர்கள் பார்த்தசாரதி, லட்சுமணன் மரபணு பகுப்பாய்வு புரத அமைப்பு குறித்தும், திருவள்ளுவர் பல்கலை இணை பேராசிரியர் அய்யா ராஜசேகர் கச்சா எண்ணெய் தேக்கத்தில் நுண்ணுயிர் பன்முகத் தன்மை குறித்து பேசினர்.
கலந்து கொண்ட 200க் கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், ஸ்ரீகாந்த், பூபதி அய்யனார் ஏற்பாடு செய்திருந்தனர்.