/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒன்றியஅலுவலகம் முன் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
ஒன்றியஅலுவலகம் முன் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 05:25 AM

பெரியகுளம், சில்வார்பட்டி ஊராட்சியில் முதல்வார்டை புறக்கணிப்பதை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் முன்பு, சில்வார்பட்டி ஊராட்சி நல்லகருப்பன்பட்டி முதல் வார்டு உறுப்பினர் வெங்கடேசன் (பா.ஜ.,), இவரது வார்டில் அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் சில்வார்பட்டி ஊராட்சி தலைவர் பரமசிவத்தை கண்டித்தும், ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தாதையும், பெரியகுளம் ஒன்றியத்தில் ரூ.பல கோடி மதிப்பீட்டில் நடந்த ஜல்ஜீவன் திட்ட பணிகள் தரமற்ற முறையில் உள்ளது என ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் நல்லபாண்டி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடேசன், வடக்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார், மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய பொது செயலாளர் அழகுவேல், நகர தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.-

