UPDATED : அக் 12, 2026 08:02 PM
ADDED : அக் 12, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் காங்., கட்சியை கண்டித்தும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அந்த கட்சியின் மணிப்பூர் எம்.பி.,யை கட்சியில் இருந்து நீக்க வழியுறுத்தியும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் காங்., கட்சியினர் கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் வினோத், மலைச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் முத்துமணி, ஜெயமுருகன், செல்வேந்திரன், சரவணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்.
