/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாறுபட்ட அனுபவத்தை ரசித்த பிரான்ஸ் பார்வையற்றோர்
/
மாறுபட்ட அனுபவத்தை ரசித்த பிரான்ஸ் பார்வையற்றோர்
ADDED : மார் 22, 2025 04:51 AM

மூணாறு: மூணாறின் இயற்கை எழிலை ரசிக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து பார்வையற்றோர் 12 பேர் கொண்ட குழு வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
'தென்னகத்து காஷ்மீர்' என வர்ணிக்கப்படும் மூணாறில், திரும்பும் திசை எல்லாம் தேயிலை தோட்டங்கள், மலைகள், வனங்கள் என பசுமை சூழ்ந்து காணப்படும். கண்களுக்கு குளுமை ஏற்படுத்தும் வகையிலான அந்த சூழலை பார்த்து அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த சூழலை பார்க்க இயலாதபோதும், மாறுபட்ட அனுபவத்தை அனுபவிக்க பிரான்ஸ் நாட்டில் இருந்த பார்வையற்றோர் 12 பேர் கொண்ட குழு மூணாறுக்கு வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அங்கு பார்வையற்றோர் மையத்தைச் சேர்ந்த 12 பேர் நான்கு தன்னார்வலர்களின் உதவியுடன் 14 நாட்கள் கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் முக்கிய சுற்றுலா பகுதிகளை பார்க்க திட்டமிட்டு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பிசியோதெரபி, ஆசிரியர் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறனர்.
மூணாறுக்கு வந்த குழு இயற்கை எழிலை ரசிக்க இயலாதபோதும் அதனை குறித்து தன்னார்வலர்களிடம் கேட்டறிந்ததுடன், ஜீப்பில் சாகச பயணம், தேனீர் ருசி, தேயிலை தோட்டங்களில் டிரங்கிங் என மாறுபட்ட சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கொச்சிக்கு புறப்பட்டனர்.