/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆனயிரங்கல் அணையில் மாயமானவர் உடல் மீட்பு
/
ஆனயிரங்கல் அணையில் மாயமானவர் உடல் மீட்பு
ADDED : ஆக 23, 2025 06:41 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே ஆனயிரங்கல் அணை நீர்தேக்கத்தில் தோணி கவிழ்ந்து மாயமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்தீப்சிங்ராம் 26, உடல் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்டப்பட்டது.
அவர் உட்பட ஐந்து வெளி மாநில தொழிலாளர்கள் பச்சைமரம் பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்தில் பணி முடிந்து ஆக.18ல் மாலை ஆனயிரங்கல் அணை நீர் தேக்கத்தில் தோணியில் மறு கரையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் தோணி நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். சந்தீப்சிங்ராம் தண்ணீரில் மூழ்கி மாயமான நிலையில் மீதமுள்ளோர் நீந்தி கரை சேர்ந்தனர்.
தொடுபுழா தீயணைப்பு துறையைச் சேர்ந்த ' ஸ்கூபா' குழு, பேரிடர் மீட்பு படை, வருவாய்துறை ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவரது உடல் நேற்று நீர் தேக்கத்தில் மிதந்தது. அதனை மீட்டு போலீசார் மேல் நடவடிக்கை எடுத்தனர்.