/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகள் வீசும் பாட்டில், பாலிதீன் கழிவுகளால்... பாதிப்பு: சுற்றுச்சூழல், வன விலங்குகள் பாதிக்கும் அவலம்

ADDED : ஆக 01, 2025 02:09 AM

மாவட்டத்தில் ஆண்டிபட்டி வேலப்பர் கோயில், வைகை அணை, கடமலைக்குண்டு சின்னச் சுருளி அருவி, பெரியகுளம் கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள்,போடி குரங்கணி, வீரபாண்டி, குச்சனூர், சண்முகா நதி, லோயர் கேம்ப் உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் உள்ளன.
சுற்றுலா இடங்கள் பெரும்பாலும் மலை, ஆறு, அருவிகளை மையமாகக் கொண்டுள்ளன. இவற்றிற்கு அப்பால் ஆற்றங்கரையில் பிரதான கோயில்கள் பலவும் உள்ளன.
சுற்றுலா இடங்களில் சீசன், விழா காலங்களில் பல ஆயிரம் மக்கள் கூடுகின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா இடங்களுக்கு வரும் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவு, உடைகளை பிளாஸ்டிக், பாலிதீன், கண்ணாடி பேக்கிங் மூலம் கொண்டு வந்து பயன்பாட்டிற்கு பின் அவற்றை அங்கே விட்டு செல்கின்றனர். குளிக்கும் இடங்களில் தங்கள் கொண்டு வந்த துணிகளையும் விட்டு செல்கின்றனர். உற்சாக பானம், குளிர்பானங்களின் கண்ணாடி பாட்டில்களையும் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லும் கழிவு பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படுவதில்லை.ஆறு, அருவி நீரில் அடித்துச் செல்லப்படும் இந்த கழிவு பொருட்கள் பல இடங்களில் ஒதுங்கி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் சிதறி கிடக்கும் உடைந்த பாட்டில்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் வன விலங்குகளுக்கு காயம் உயிரிழப்பு ஏற்படுத்துகிறது.
வனத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் எத்தனை கட்டுப்பாடு விதித்தாலும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை. வனத்துறை உள்ளாட்சி, நீர் வளத்துறை நிர்வாகத்தினர் கூட்டு முயற்சியில் சுற்றுலா இடங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தன்னார்வலர்கள் கோரியுள்ளனர்.