/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 தங்கம் வென்று மாணவர் சாதனை
/
சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 தங்கம் வென்று மாணவர் சாதனை
சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 தங்கம் வென்று மாணவர் சாதனை
சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 தங்கம் வென்று மாணவர் சாதனை
ADDED : ஜன 14, 2024 11:32 PM

தேனி : கர்நாடகா, கூர்க் மாவட்டத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் 2 தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2023 டிசம்பர் 27 முதல் 28 வரை கர்நாடகா, கூர்க் மாவட்டத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி நடந்தது. இதில் தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை 2ம் ஆண்டு மாணவர் முஹம்மதுமர்ஜூக் பங்கேற்றார்.
அவர் குத்து வரிசை, இரட்டை சுருள் வாள் உட்பட 2 போட்டிகளில் வென்று இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றார். வெற்றி பெற்ற மாணவரை தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச் செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் கல்லுாரியின் செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், முதல்வர் தர்மலிங்கம் பாராட்டி, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.