/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலை உணவுத் திட்டம் உதவி பெறும் பள்ளிகளில் துவக்கம்
/
காலை உணவுத் திட்டம் உதவி பெறும் பள்ளிகளில் துவக்கம்
காலை உணவுத் திட்டம் உதவி பெறும் பள்ளிகளில் துவக்கம்
காலை உணவுத் திட்டம் உதவி பெறும் பள்ளிகளில் துவக்கம்
ADDED : ஆக 27, 2025 12:41 AM
கூடலுார்; அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூடலுார் என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளியில் அரசின் காலை உணவுத் திட்டத்தை எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் பத்மாவதி, நகராட்சி பொறியாளர் சந்தியா, கம்பம் பி.டி.ஓ., மக்கதம்மாள், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி மேலாளர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் துவக்கப்பள்ளி, இந்து ஆரம்பப்பள்ளி, வ.உ.சி., நடுநிலைப்பள்ளியிலும் இத்திட்டம் துவக்கப்பட்டது.
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி இந்து ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் திட்டத்தை துவக்கி வைத்தார். தி.மு.க., ஆண்டிபட்டி நகர செயலாளர் சரவணன், ஆண்டிபட்டி பி.டி.ஓ.,க்கள் சரவணன், ஐயப்பன், இந்து ஆரம்ப பள்ளி தாளாளர் ரவீந்திரன், தலைமை ஆசிரியர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கேசரி, வெண்பொங்கல், சாம்பார் ஆகியவை காலை உணவாக பரிமாறப்பட்டது.