/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலை உணவுத் திட்டம் 111 பள்ளிகளுக்கு விரிவாக்கம் 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்

ADDED : ஆக 24, 2025 03:58 AM
தேனி: மாவட்டத்தில் நகர்பகுதியில் செயல்படும் 111 பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் ஆக.26 முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இத் திட்டத்தால் 16ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுதப்பட்டது.
அப்போது மாவட்டத்தில் 445 அரசுப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 87 உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6439 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர்.
ஆக.,26 முதல் இத்திட்டம் நகர்பகுதிகளில் உள்ள உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.அதன்படி மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள 111 பள்ளிகளைச் சேர்ந்த 16ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக பெரியகுளம், போடியில் பொது சமையல் கூடங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக சத்துணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.