/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உற்பத்தி குறைவால் செங்கல் விலை உயர்வு
/
உற்பத்தி குறைவால் செங்கல் விலை உயர்வு
ADDED : நவ 25, 2024 06:09 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் உற்பத்தி குறைவால் செங்கல் விலை உயர்ந்துள்ளது.
இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. செங்கல் உற்பத்திக்கு தேவையான வண்டல், செம்மண், நீர் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதால் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செங்கல் உற்பத்தி தொடர்கிறது. மாதந்தோறும் பல லட்சம் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் தேனி உட்பட வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக நிலவும் பருவநிலை மாற்றம் செங்கல் உற்பத்திக்கு சாதகமாக இல்லை. இதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல் காளவாசல்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பெய்யும் மழை, வெயில் இல்லாத குளிர்ச்சியான பருவ நிலையால் செங்கல் உற்பத்தி செய்ய முடியவில்லை. இருப்பில் இருந்த செங்கல்கள் விற்பனையாகி வருகின்றன. காளவாசல்களில் செங்கல் இருப்பு இல்லை. தட்டுப்பாடு காரணமாக ரூ.5.80 வரை விலையில் இருந்த ஒரு செங்கல் விலை தற்போது ரூ.7.00 வரை உயர்ந்துள்ளது., என்றார்.