/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தகராறில் கொத்தனார் கொலை; இருவர் மீது வழக்கு பதிவு
/
தகராறில் கொத்தனார் கொலை; இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 13, 2025 01:37 AM
பெரியகுளம்; தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வாய்தகராறில் ஏற்பட்ட மோதலில் கொத்தனார் துளசிமணியை 25, கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா 36, தங்கப்பாண்டி 24, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் தெற்குபுதுத்தெருவைச் சேர்ந்த கொத்தனார் துளசிமணி 25. ஆக.,11ல் அதே தெருவைச் சேர்ந்த பாண்டியன் இறந்து விட்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா 36, தென்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கூறினார். அதையடுத்து பாண்டியன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தெருவில் சமுதாய பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது துளசிமணி, பாண்டியன் இறப்பில் சந்தேகம் என போலீசுக்கு முத்தையா தகவல் கொடுத்ததாக தெரிவித்தார். இதனால் துளசிமணிக்கும், முத்தையாவிற்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் முத்தையா அரிவாளை துளசிமணி மீது வீசினார். துளசிமணி விலகி ஓடும் போது மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்தையா அக்கா மகன் தங்கப்பாண்டி 24, வழிமறித்து கத்தியால் துளசிமணியை குத்திக்கொலை செய்தார். துளசிமணி தம்பி கார்த்திகேயன் புகாரின்படி முத்தையா, தங்கப்பாண்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.