/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் அடிக்கடி 'கட்' ஆகும் பி.எஸ்.என்.எல்., சேவை
/
கூடலுாரில் அடிக்கடி 'கட்' ஆகும் பி.எஸ்.என்.எல்., சேவை
கூடலுாரில் அடிக்கடி 'கட்' ஆகும் பி.எஸ்.என்.எல்., சேவை
கூடலுாரில் அடிக்கடி 'கட்' ஆகும் பி.எஸ்.என்.எல்., சேவை
ADDED : ஜன 04, 2024 06:30 AM
கூடலுார்: கூடலுாரில் பி.எஸ்.என்.எல்., சேவை அடிக்கடி 'கட்' ஆவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுாரில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி, லேண்ட்லைன் போன், பிராட்பேண்ட் பயன்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் அதிகமாக இச்சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி இணைப்பு துண்டிப்பதும் பல மணி நேரத்திற்கு பின் சீரமைப்பதுமாக உள்ளனர். கூடலுார் தொலைபேசி நிலையத்தில் பேட்டரி பராமரிக்கப் படாமல் இருப்பதால் மின்தடை ஏற்படும் போது தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. ஏற்கனவே ஏராளமான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையில் இருந்து மாறி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். எனவே தடையில்லா சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் முன் வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.