/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வர்த்தகர் தற்கொலை: கேரள ஆளும் கட்சிக்கு நெருக்கடி
/
கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வர்த்தகர் தற்கொலை: கேரள ஆளும் கட்சிக்கு நெருக்கடி
கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வர்த்தகர் தற்கொலை: கேரள ஆளும் கட்சிக்கு நெருக்கடி
கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வர்த்தகர் தற்கொலை: கேரள ஆளும் கட்சிக்கு நெருக்கடி
ADDED : டிச 23, 2024 05:50 AM
மூணாறு: கட்டப்பனையில் ஊரக வளர்ச்சி கூட்டுறவு வங்கியில் வர்த்தகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டப்பனை நகரில் பேன்சி கடை நடத்தி வந்த சாபு 56, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமுள்ள கட்டப்பனை ஊரக வளர்ச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.90 லட்சம் 'டெபாசிட்' செய்தார். அத்தொகையில் பல தவணையாக ரூ.78 லட்சம் திரும்ப பெற்ற நிலையில், ரூ.12 லட்சம் இருப்பில் இருந்தது.
மருத்துவ சிகிச்சை↓
தொடுபுழாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி மேரிகுட்டியின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைபட்டதால் சாபு வங்கியை அணுகினார். ஆனால் வங்கி நிர்வாகம் கணக்கில் உள்ள பணத்தை திரும்ப கொடுக்காமல், வங்கி ஊழியர்கள் சாபுவிடம் அவமரியாதையாக நடந்து கொண்டனர்.
தற்கொலை
மன உளைச்சலுக்கு ஆளான சாபு தன்னுடைய மரணத்திற்கு செயலர் ரெஜி, ஊழியர்கள் பினோய், சுஜாமோள் ஆகியோர் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, வங்கி கட்டடத்தில் டிச.20ல் காலை துாக்கிட்டு தற்கொலை செய்தார்.இச்சம்பவம் கட்டப்பனையை உலுக்கிய நிலையில் காங்கிரஸ், பா.ஜ., வர்த்தக சங்கம் ஆகியோர் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களில் இறங்கினர்.
மிரட்டல்
இதனிடையே வங்கியின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட குழு உறுப்பினருமான சஜி அலைபேசியில் சாபுவை மிரட்டும் வகையில் பேசிய பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெருக்கடி
சாபு மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்ததால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விளக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூ., இடுக்கி மாவட்ட செயலாளர் வர்க்கீஸ் கூறுகையில், 'பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி வசம் இருந்த வங்கி கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., வசம் வந்தது. காங்., கூட்டணியால் வங்கியில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அதனை படிப்படியாக சமாளித்து வருகின்றனர். நிதி நெருக்கடியால் டெபாசிட் செய்தவர்களுக்கு மாதம்தோறும் தொகை வழங்கப்படுகிறது. அது போன்று சாபுவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது. வங்கி முன்னாள் தலைவர் சஜியின் அலைபேசி பேச்சு குறித்து விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார்.

