ADDED : பிப் 17, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அமைப்பு சார தொழிலாளர்கள் நல வாரிய இணையதளம் சர்வர் பழுது காரணமாக ஆவணங்கள் மீட்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்.,2க்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதற்காக கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சமூக பாதுகாப்புத்திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம் பதிவு பெற்ற தொழிலாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறாலம் என தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.