/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மெழுகுவர்த்தி ஏந்தி காங்., ஊர்வலம்
/
மெழுகுவர்த்தி ஏந்தி காங்., ஊர்வலம்
ADDED : ஆக 15, 2025 02:44 AM

தேனி: தேனியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், தேர்தல் ஆணையம் மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிவிலக கோரி மெழுகுவர்த்தி ஏந்தி, கண்டன ஊர்வலம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்டில் நேருசிலை துவங்கி பங்களாமேடு சென்று அங்கிருந்து மீண்டும் நேருசிலை வழியாக கொட்டக்குடி பாலத்தின் அருகே நிறைவடைந்தது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாவட்டச் செயலாளர் சம்சுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, தேனி வட்டார தலைவர் முருகன், தலைவர்இனியவன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி ஐ.என்.டி.யு.சி., மாவட்டத் தலைவர் ஜம்புசுதாகர், ஆண்டிபட்டி தொகுதி பொறுப்பாளர்முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தால் நேற்று மாலை ஒரு மணி நேரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.