/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயத்தில் செல்பி எடுத்து அலட்சியம் : முல்லையாற்றங்கரைகளில் கண்காணிப்பு அவசியம்
/
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயத்தில் செல்பி எடுத்து அலட்சியம் : முல்லையாற்றங்கரைகளில் கண்காணிப்பு அவசியம்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயத்தில் செல்பி எடுத்து அலட்சியம் : முல்லையாற்றங்கரைகளில் கண்காணிப்பு அவசியம்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயத்தில் செல்பி எடுத்து அலட்சியம் : முல்லையாற்றங்கரைகளில் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூன் 01, 2025 12:23 AM

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் பெரியாற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் அதிகரித்து செல்கிறது. ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் 'செல்பி' எடுப்பதில் ஆர்வம் காட்டி அபாயத்தில் சிக்குகின்றனர். ஆற்றோரம் போதிய பாதுகாப்பு, கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளாட்சி, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை நீர் ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. அணையில் திறக்கப்படும் நீர் லோயர் கேம்ப், கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி, தேனி வருகிறது. தேனி அருகேயுள்ள கோட்டைபட்டியில் மூலவைகை ஆற்றுடன் இணைந்து வைகை அணைக்கு செல்கிறது.
தற்போது தென்மேற்கு பருவ மழை காரணமாக முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த வாரம் வரை அணையில் இருந்து 100 கனஅடி திறக்கப்பட்ட நிலையில், தற்போது வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் செல்வது போல் தண்ணீர் செல்கிறது.
ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கு அபாயத்தை உணராத சிலர் குளிக்கவும், துவைக்கவும் செல்கின்றனர். சிலர் புகைப்படம் எடுக்கும் மோகத்தில் தனித்தும், நண்பர்கள், குடும்பத்துடன் ஆற்றில் இறங்குகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு அவசியம்
குறிப்பாக முல்லைப்பெரியாற்றில் உள்ள சில படித்துறை பகுதிகளில் போலீசார், உள்ளாட்சிகள் சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலர் அலட்சியமாக கடந்து சென்று தண்ணீரில் இறங்குகின்றனர். இந்நிலையில் நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து ஆற்றங்கரைகளுக்கு குளிக்க செல்லலாம். இதனால் படித்துறைகள் உள்ள இடங்கள், பொதுமக்கள் அதிகம் குளிக்கும் இடங்களில் போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அந்த இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்திட வேண்டும்.