ADDED : செப் 20, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சந்தனகருப்பன் மனைவி பிரியதர்ஷினி 25. இவரது பக்கத்து வீட்டுக்காரர் சிவபாரதி 30. பிரியதர்ஷினி அவரது வீட்டை கழுவி கழிவுநீரை வெளியேற்றி கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தன் வீட்டுக்கு வருவதாக கூறி சிவபாரதி அவதூறாக பேசியுள்ளார்.
ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்டதற்கு சிவபாரதி உறவினர்கள் நாச்சான், ஆதிமூலம், சந்தனகருப்பனை கம்பால் அடித்தனர்.
நாச்சான், பிரியதர்ஷினியின் ஆடையை பிடித்து இழுத்தும், அவரது மாமியாரையும் அடித்துள்ளார்.
வடகரை போலீசார் சிவபாரதி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--