/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தந்தைக்கு கத்திக்குத்து மகன் மீது வழக்கு
/
தந்தைக்கு கத்திக்குத்து மகன் மீது வழக்கு
ADDED : பிப் 28, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம், : உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் வசிப்பவர் மொக்கைப் பாண்டியன் 60.
இவரது மகன் கார்த்திகேயன் 37. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். தந்தையுடன் வசித்து வரும் மகன் செலவிற்கு அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் பணம் கேட்டுள்ளார்.தர மறுத்த தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

