/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பணிக்கு இடையூறு செய்த 5 பேர் மீது வழக்கு
/
அரசு பணிக்கு இடையூறு செய்த 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 25, 2025 04:55 AM
தேவதானப்பட்டி: மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே பணியில் ஈடுபட்டிருந்த பி.டி.ஓ., ராகவனை அரசு பணிக்கு இடையூறு செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஊராட்சி, அம்மாபட்டி தெருவில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் தெரு மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அம்மாபட்டி தெரு மக்கள், சில தினங்களுக்கு முன்பு மேல்மங்கலம் ஊராட்சியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, பி.டி.ஓ.,ராகவன் தலைமையில் சர்வேயர், ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் அளவீடு செய்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த நாகராஜ், பிரியா,நாகேஸ்வரி, நாகஜோதி, முத்துப்பாண்டி ஆகியோர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் பணி துவங்கக்கூடாது என பணிக்கு இடையூறு செய்தனர். இவர்கள் இதே பகுதியில் கடந்த செப்.19ல் ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை சேதப்படுத்தினர். இதனை சீரமைக்க சென்ற ஊராட்சி செயலாளர் முருகனை தடுத்து, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தனர். பி.டி.ஓ., ராகவன் புகாரில், நாகராஜ் உட்பட 5 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதி வு செய்து விசாரிக்கின்றனர்.
--

