ADDED : டிச 26, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தோப்பூர் ரோடு  பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 59, ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராகஉள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சீதாராம்தாஸ் நகரில் உள்ள வீட்டை ஈஸ்வரன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
தனது அப்பாவிடம் வீட்டை ஏமாற்றி வாங்கி விட்டதாக ஈஸ்வரன் அவரது உறவினர்கள் கவின், கோகுல், சிவா, சத்யா ஆகியோருடன் சென்று கண்ணன் மற்றும் அவரது மகனிடம் தகராறு செய்து அடித்துள்ளனர்.
இது குறித்து கண்ணன் புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் முதியவரிடம் தகராறு செய்து தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

