/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் போலீசை தாக்கியவர் மீது வழக்கு
/
பெண் போலீசை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி 37, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை போலீசாக உள்ளார்.
இவரது கணவர் சுப்புராஜ், இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சுப்புராசுக்கு அதே ஊரைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக காளீஸ்வரி, அந்தப் பெண்ணின் கணவரிடம் எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், காளீஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கைகளால் தாக்கியுள்ளார்.
இது குறித்து காளீஸ்வரி கொடுத்த புகாரில் அவரை தாக்கிய பிச்சை என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.