ADDED : ஜூன் 06, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே எஸ்.தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் குமார் 28. இவரிடம் சின்னமனூர், அய்யம்பட்டியை சேர்ந்த வல்லரசு ரூ. 3500 கடன் வாங்கி உள்ளார்.
வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த வல்லரசு கூட்டாளியான செல்வம், உசிலம்பட்டி மதன் ஆகியோருடன் சந்தோஷ்குமார் வீட்டிற்குள் நுழைந்து, அடித்து காயம் ஏற்படுத்தினர்.
சந்தோஷ்குமார் புகாரில் போடி தாலுாகா போலீசார் வல்லரசு, செல்வம் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.