/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரிடியம் என ரூ 9.5 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
/
இரிடியம் என ரூ 9.5 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
இரிடியம் என ரூ 9.5 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
இரிடியம் என ரூ 9.5 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
ADDED : டிச 24, 2024 11:52 PM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.9.5 லட்சம் மோசடி செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் 56. தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டு விரக்தியில் இருந்துள்ளார். இவரை தேனியை சேர்ந்த குமார் என்பவர் அணுகியுள்ளார். இரிடியம் வாங்கி விற்றால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
அதே நேரம் தேனியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜஸ்டின் ஜெயக்குமாரை போனில் தொடர்பு கொண்டு இரிடியம் இருந்தால் ரூ.5 கோடி வரை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி குமாரிடம் ஜஸ்டின் ஜெயக்குமார் கூறினார். இரிடியம் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் வேண்டும் என குமார் கூறினார். இதனை நம்பிய ஜஸ்டின் ஜெயக்குமார் ரூ.9.5 லட்சத்தை குமாரிடம் கொடுத்தார்.
க.விலக்கு அருகே உள்ள லாட்ஜில் வைத்து இரிடியத்தை வாங்க முடிவு செய்தனர். இரிடியத்தை கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு ராஜேஷ் தயாராக உள்ளதாக ஜஸ்டின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ஜெயகுமாரிடம் ரூ.9.5 லட்சத்தை பெற்றுக் கொண்ட குமார் செம்பு பாத்திரத்தை இரிடியம் என கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், இது இரிடியம் தான் என கூறியுள்ளார். அதை மதுரைக்கு கொண்டு வரும்படியும், அங்கு பேசிக்கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கூறி சென்றார்.
அதன்பின் குமார், ராஜேஷ் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து இருவரும் கூட்டு சேர்ந்து இரிடியம் என்று சொல்லி தன்னிடம் ரூ.9.5 லட்சம் மோடி செய்ததாக ஜஸ்டின் ஜெயக்குமார் போலீசில் புகார் செய்தார். குமார், ராஜேஷ் இருவர் மீதும் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், எஸ்.ஐ., சவரியம்மாள் தேவி வழக்கு பதிவு செய்துள்ளனர்.