ADDED : ஜூன் 29, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே கரட்டுப்பட்டி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வேலுமணி 46. இவரிடம் காமாட்சிபுரம் அருகே அழகாபுரியை சேர்ந்த பழனிமுருகன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி., யில் பணம் போடுவதாக கூறி ரூ.14.50 லட்சம் பெற்றுள்ளார். பணம் செலுத்தாமல் வேலுமணிக்கு ரூ.7 லட்சத்திற்கு வட்டி கொடுத்து வந்துள்ளார். அதன் பின் வட்டி கொடுக்கவில்லை. இதனால் வேலுமணி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த பழனி முருகன், இவரது தந்தை பழனிச்சாமி இருவரும் வேலுமணியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.வேலுமணி புகாரில், போடி தாலுாகா போலீசார் பழனிமுருகன், பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.