தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஜன., முதல் வாரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கம்

ஜன., முதல் வாரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கம்

ஜன., முதல் வாரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கம்


UPDATED : நவ 18, 2026 11:51 PM

ADDED : நவ 18, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 11:51 PM ADDED : நவ 18, 2026 06:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தமிழகத்தில் 2027 ஜன., முதல்வாரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புபணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 க்கான பணிகள் நடந்து வருகிறது. முதன்முறையாக கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட கணக்கெடுப்புபணிகள் கடந்த ஆக.,ல் நடந்தது. அதில் வீடுகள், நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டது. பொதுமக்கள் தாங்களாகவே வசிப்பிடம் விபரம் பதிவு செய்தனர். பதிவு செய்யாதவர்கள் வீடுகளில் கணக்கெடுப்பாளர்கள் வருகை தந்து பதிவு செய்தனர்.

2ம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்குவதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ம் கட்ட பணிகள் 2027 ஜன., முதல் வாரத்தில் துவங்குகிறது. பிப்., 28 வரை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு டிச.,ல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மக்கள் வழங்கும் தகவல்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். இது தவிர பழைய முறைப்படி வரைபடத்திலும் கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக கணக்கெடுப்பாளர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட உள்ளன,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us