/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத்திய அரசின் திட்டங்களை வீடுகள் தோறும் விளக்க வேண்டும்: பா.ஜ. ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : பிப் 07, 2024 12:43 AM
சின்னமனூர்: மத்திய அரசின் சாதனைகள்,நலத்திட்ட விபரங்களை இல்லம் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பா.ஜ. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கம்பம் சட்டசபை தொகுதி அளவிலான பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சின்னமனூரில் நடைபெற்றது. நகர் தலைவர் லோகேந்திரராஜன் தலைமைவகித்தார்.
சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன், அமைப்பாளர் தங்க பொன்ராஜா, இணை அமைப்பாளார் வினோத் குமார், மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நகர், ஒன்றிய, மாவட்ட, சார்பு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விடுபட்டு போன பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணிக்குழு அமைத்தல், தேர்தல் அலுவலகங்கள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசின் சாதனைகள், நலத்திட்ட விபரங்களை இல்லம் தோறும் கொண்டு சேர்க்கவும், முக்கிய சமுதாயபிரமுகர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, மேலிடத்திற்கு தெரிவிக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். தேர்தல் பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. நகர் தலைவர் லோகேந்திரராசன் தெரிவித்தார்.