/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பறக்கும் படையினரின் பணி நேரம் மாற்றியமைப்பு! புதிய இடங்களில் நிலைக்குழு கண்காணிப்பு
/
தேர்தல் பறக்கும் படையினரின் பணி நேரம் மாற்றியமைப்பு! புதிய இடங்களில் நிலைக்குழு கண்காணிப்பு
தேர்தல் பறக்கும் படையினரின் பணி நேரம் மாற்றியமைப்பு! புதிய இடங்களில் நிலைக்குழு கண்காணிப்பு
தேர்தல் பறக்கும் படையினரின் பணி நேரம் மாற்றியமைப்பு! புதிய இடங்களில் நிலைக்குழு கண்காணிப்பு
ADDED : மார் 29, 2024 06:28 AM

லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்கும் வசதி, சோசியல் மீடியா எக்ஸ்பெர்ட் குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர வாகனங்களை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 9 நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படை குழுக்கள், 2 வீடியோ பதிவேற்றும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் ஒரு வருவாய்த்துறை, பிறத்துறை அலுவலர்கள் தலைமையில் 4 போலீசார் என 5 பேர் குழுவில் உள்ளனர். தொகுதியில் ஒரே நேரத்தில் 3 குழுக்கள் செயல்படும்.
இந்த குழுக்கள் 3 ஷீப்டுகளாக மார்ச் 17 ல் இருந்து காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணிவரை, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை என பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் இக்குழுக்கள் இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் அலுவலர்கள் பகலில் பணிக்கு செல்ல இயலவில்லை. மேலும் ஷிப்ட் நேரத்தை சுழற்சி முறையில் மாற்றி அமைக்க கூறினர்.
இந்நிலையில் இரவு ஷீப்டில் பணிபுரிந்தவர்கள் நேற்று முதல் மதியம் ஷீப்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காலை ஷிப்ட் பணிபுரிந்தவர்கள் இரவு, மதியம் பணிசெய்தவர்கள் காலை ஷிப்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் மட்டும் செயல்படும் நிலைகண்காணிப்புக்குழுக்களை இடங்களை மாற்றி அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

