sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

/

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : அக் 26, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடமலைக்குண்டில் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

தேன் சுடர் பெண்கள் இயக்க செயற்குழு உறுப்பினர் லட்சுமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நாகஜோதி வரவேற்றார். கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிட்டார்.

கடமலைக்குண்டு ஊராட்சி தலைவர் சந்திரா முன்னிலை வகித்து நடை பயணத்தை துவக்கி வைத்தார். கரட்டுப்பட்டியில் இருந்து கடமலைக்குண்டு ஊராட்சி அலுவலகம் வரை நடைபயண ஊர்வலம் நடந்தது.

நடை பயணத்தில் சமூக நலத்துறை அலுவலக பணியாளர் தீபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பிரேமா ஆகியோர் பேசினர்.

ஆரோக்ய அகம் நிறுவனத்தின் துணை இயக்குனர் முருகேசன் நடைபயணத்தை முடித்து வைத்தார்.

குழந்தை திருமணங்களை தடுத்தல், அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்தல், இள வயது திருமணம் நடத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டம் பதிவு செய்தல் உட்பட பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை நடை பயணத்தில் முன்வைத்தனர்.

தேன் சுடர் பெண்கள் இயக்கப் பொருளாளர் பாண்டீஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us