/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுவனுக்கு தொந்தரவு: 3 சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ADDED : நவ 09, 2024 02:34 AM
தேனி:தேனி பங்களாமேடு விடுதியில் தங்கியிருந்த 10 வயது சிறுவனை, 12, 13, 14 வயதுள்ள மூன்று சிறுவர்கள் பாலியல் தொந்தரவு செய்ததால், அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிந்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
போடி தாலுகாவை சேர்ந்த 30 வயது பெண். கணவர் இறந்த நிலையில் பழனிசெட்டிபட்டி மில்லில் டெய்லராக பணிபுரிந்து, தாய், 13 வயது மகள், 10 வயது மகனுடன் வசித்தார்.
மகன் தேனி அரசு விடுதியில் தங்கி நகராட்சிப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இங்குள்ள பள்ளிகளில் 8 ம் படிக்கும் 12 வயது மாணவன், 9ம் வகுப்பு 14 வயது மாணவன், 13 வயது மாணவன் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.
இரவு 10 வயது சிறுவனை நவ.,5, 6, 7ல் பாலியல் தொந்தரவு செய்தனர். இதற்கு பயந்து பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுவன், தாயிடம் நடந்த விபரங்களை கூறினார்.
தாய் புகாரில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்.ஐ., மகேஸ்வரி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிந்து, மூவரையும் தேனி சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.