/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள்
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள்
சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள்
சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : நவ 12, 2024 11:50 PM

தேனி : தேனி அருகே 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அழகாபுரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணனுக்கு 50, ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான 11 வயது சிறுமி அருகிலுள்ள நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். 2021 செப்.,6 மாலை அழகாபுரியைச் சேர்ந்த கண்ணன் 50, சிறுமியை டூவீலரில் தேனி - பெரியகுளம் ரோடு வடபுதுப்பட்டிக்கும் மதுராபுரிக்கும் இடையில் உள்ள கிணறு அருகே அழைத்து சென்றார். அங்கு சிறுமியிடம் கண்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அவ்வழியாக சென்ற இருவர் அதனை கவனித்து இருவரையும் சிறுமியின் பெற்றோரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுமி பெற்றோரிடம் அழுதபடி கண்ணன் தன்னை இதற்கு முன் பணம் கொடுத்து ஏமாற்றி 5 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றார்.
சிறுமியின் பெற்றோர் புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, எஸ்.ஐ., சுப்புலட்சுமி ஆகியோர் கண்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜரானார். கண்ணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.