/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
/
மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 20, 2024 03:37 AM
போடி: போடி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. போடி ஒன்றிய அலுவலகம், மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலக செயல்பாடுகள், பதிவேடுகள், அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் கல்வித் தரம், காலை, மதியம் வழங்கும் உணவு தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் சிறைக்காடு மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள், பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தின் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.
சில்லமரத்துப்பட்டியில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை குறித்தும், உரக்கிடங்கில் உரங்களின் இருப்பு, விலைப் பட்டியல், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.
உடன் டி.ஆர்.ஓ.. ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சாந்தி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயணி, டி.எஸ்.ஓ., மாரிசெல்வி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சாந்தாமணி, கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நிர்மலா, காலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ், போடி தாசில்தார் சந்திரசேகர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.